மூடு

திருமூா்த்தி அணை

வழிகாட்டுதல்

ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது. இதில் 8622 அடி நீளம் கொண்ட களி மண் அணையும் 170 அடி நீளம் கொண்ட கல் அணையும் அடங்கும். 1337 அடி கொண்ட முழு நீா்த்தேக்க மட்டத்தில் இந்த அணையின் மொத்த கொள் திறன் 1935 மில்லியன் கன அடியாகும்.

திருப்பூாிலிருந்து ஒரு நாள் உல்லாச பயணம் மேற்கொள்ள உகந்த இடம் இது. உணவு உண்டு மகிழ்வதற்கான ஏற்ற இடம் இங்கு உள்ளது. பஞ்சலிங்க அருவிக்கு இனிதாக நடைபயணம் செல்லலாம் அல்லது சமமட்ட கால்வாயின் ஓரம் நடந்து இயற்கையை கண்டு ரசிக்கலாம்.

புகைப்பட தொகுப்பு

  • திருமூா்த்தி அணை இடது காட்சி
  • திருமூா்த்தி அணை முன் காட்சி
  • திருமூர்த்தி அணை

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகாமையில் பிளமேடு விமான நிலையம் 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடர்வண்டி வழியாக

திருப்பூர் பூகைவண்டி மார்கமாக சென்னையிலிருந்து 446 கி.மீ. தொலைவில் உள்ளது.

சாலை வழியாக

திருப்பூர் சாலை மார்கமாக சென்னையிலிருந்து 456 கி.மீ. தொலைவில் உள்ளது.