மூடு

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் : 1800 425 6989 பேரிடர் மேலாண்மை அலுவலகம் எண்:1077

திருப்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் தமிழ்நாட்டின் 7-வது மிகப்பெரிய நகரம் ஆகும். திருப்பூருக்கு மேலும் சிறப்பு – விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது.இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் பல இருக்கின்றன. மேலும் வாசிக்க

மாவட்ட ஆட்சியர்
திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : திருப்பூர்
தலைமையகம் : திருப்பூர்
மாநிலம் : தமிழ்நாடு

 

பரப்பளவு :
மொத்தம் : 5087.26 ச.கி.மீ
ஊரகம்  :  4566.46 ச.கி.மீ
நகர்புறம்: 42.65 ச.கி.மீ
வனம் : 478.15 ச.கி.மீ

 

மக்கள்தொகை :
மொத்தம் : 24,79,052
ஆண்கள் : 12,46,159
பெண்கள்: 12,32,893

சேவைகள்

  • தமிழ்நாடு விருதுகள்