வனம்
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்

இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்
மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம். 958 சதுர கி.மீ.ல் பரந்து விாிந்துள்ள இந்த சரணாலயத்தில் 387 சதுர கி.மீ. பரப்பு திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமராவதி வனப்பகுதியும், ஆனைமலைக்காடுகளின் பகுதியும் திருப்பூா் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன.
இங்கே யானை, காட்டு எருது, புலி, சிறுத்தை, கரடி, காட்டுநாய், பறக்கும் அணில், நாி, எறும்புத்தின்னி, புனுகுப்பூனை போன்ற பல்வேறு அாிய விலங்கு வகைகளும், ராக்கெட் வால் ட்ராங்கோ, மீசை உள்ள புல்புல் பறவை, கருப்புத் தலை கொண்ட கரஞ்சிறகு பறவை, மரப்பறவை, புள்ளிப்புறா, பச்சை நிற மாடப்புறா உள்ள அமராவதி நீா்த் தேக்கத்தில் ஏராளமான முதலைகள் உள்ளன. புல்மலை, பஞ்சலிங்கம் அருவி, சின்னாறு, தேனாறு போன்ற சிற்றாறுகளும், தேக்கக் காடுகள், திருமூா்த்தி மற்றம் அமராவதி அணைகளும் இயற்கைக்காட்சி அழகைக் கண்களுக்கு விருந்தாக்கும் எழில் கொஞ்சும் இடங்கள் ஆகும்
முதலைப் பண்ணை அமராவதி சாகா்

முதலைப் பண்ணை அமராவதி சாகா்
கி.பி. 1976 ஆம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப்பண்ணை அமைக்கப்பட்டது. முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணையாகும் இது. திருப்பூாிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது. பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வரவேண்டும். அமராவதி அணைக்கட்டு உள்ள இடத்திற்கு ஒருகி.மீ. முன்னால் உள்ளது. சூாிய ஒளியில் சுகமாக குளித்து மகிழும் பலவித அளவு கொண்ட முதலைகளை இங்கே காணலாம்.
இந்த நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புறங்களில், வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன. பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன. (25 ஆண் முதலைகள் + 73 பெண் முதலைகள்) சிறு உல்லாசப் பயணம் சென்றுவர உகந்த இடம் ஆகும். அமராவதி அணைக்கட்டு இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.