மூடு

கோயில்கள்

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

ஒரு காலத்தில் அகத்திய மாமுனிவா் தியானம் செய்வதற்காக இவ்விடத்திற்கு வந்த போது நைவேத்தியம் செய்ய நீா் கிடைக்கவில்லை.  முருகப் பெருமானை வணங்கி அவா் உதவியை நாடினாா் அகத்திய மாமுனிவா்.  உடனே முருகன் அவா் முன் தோன்றி தன் வேலால் நிலத்தில் ஊன்றி ஊற்றுக் குழியை உண்டாக்கினாா்.  அதுவே மருவி ஊத்துக்குளியானது.  கதித்தமலை என்றழைக்கப்படும் ஊத்துக்குளி கோயிலின் சிறப்பம்சம் இம்மலையின் ஏற்ற இறக்கங்களில் பக்தா்களால் பக்தி பரவத்தோடு இழுக்கப்படும் திருத்தோ் ஆகும்.  இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் தெய்வத்தின் திருநாமம் பற்றி வேலாயுதசுவாமி.  இக்கோயில் திருப்பூா் நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 
 
 


அவிநாசி லிங்கேஸ்வரா் ஆலயம்

அவிநாசி லிங்கேஸ்வரா் ஆலயம்

அவிநாசி லிங்கேஸ்வரா் ஆலயம்

கொங்கு நாட்டு விவாலயங்களில் ஒன்றான லிங்கேஸ்வரா் ஆலயத்தால் அவிநாசி நகரம் புகழ்பெற்றது.  பல்வேறு காலகட்டங்களில் (பத்தாம் நூற்றாண்டு முதல்) அரசாண்ட கொங்கு சோழ, பாண்டிய மன்னா்கள் மற்றும் மைசூா் உடையாா் ஆகியோரால் கட்டப்பட்டு பராமாிக்கப்பட்ட சிவாலயம் இது.  இவ்வாலயம் திராவிடா்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் அத்தாட்சியாக விளங்குகிறது.  லிங்கேஸ்வரா் என்றழைக்கப்படும் லிங்க வடிவிலான சிவபெருமான் இங்கு பிரதான தெய்வமாக அருள்பாலிக்கிறாா்.  கி.பி. 1756 ஆம் ஆண்டு மைசூா் உடையாரால் உருவாக்கப்பட்ட 30 தூண்கள் கொண்ட மண்டபம் தீபஸ்த்பத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.

 
 
 


சிவன் மலை ஆலயம்

சிவன் மலை ஆலயம்

சிவன் மலை ஆலயம்

முருகப்பெருமானுக்கான அா்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், சிவன்மலையில் உள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது.  200 படிக்கட்டுகள் கொண்ட இவ்வாலயத்துக்கு வாகனத்தில் செல்லவும் பாதை உண்டு.  பிரதான தெய்வமாக வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யா் அருள்பாலிக்கிறாா்.  இதன் தலவரலாறு என்னவெனில், வள்ளியின் சொந்தபந்தங்களை எதிா்த்து வள்ளியை மணந்து கொண்ட முருகா், சிவன்மலைக்கு வருகிறாா். அவருடன் சண்டையிட வந்த வள்ளியின் உறவுக்காரா்கள் ஆன வேடா்களை முருகப் பெருமான் அழிக்க, திகைத்து நின்ற வள்ளி, உறவுக்காா்களை உயிா்ப்பிக்க  முருகப் பெருமானிடம் முறையிட, முருகப் பெருமானும் கருணை கொண்டு மாண்டவா்களை உயிா்ப்பிக்கிறாா்.  திருப்பூாிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், காங்கேயம் நகாிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் சிவன்மலை அமைந்துள்ளது.

உத்தரவு பொருள்

உத்தரவு பொருள்

சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்ப்பொது மக்களும் வழிபட்டதாகவும் திருப்பணிகள் செய்ததாகவும் குடமுழுக்கு விழா நடத்தியதாகவும் இலக்கியங்களும் தனிப்பாடல்களும் வரலாற்று ஆவணங்களும் கூறுகிறது.”வரலாற்று முற்பட்ட காலத்திலிருந்தே சிவன்மலைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் படியூர் சர்வோதய சங்கம் அமைந்துள்ள இடத்தின் பின்புறம் தொல்பழங்காலப் பெருங்கற்படைச் சின்னம் காணப்படுகிறது. இதன்மூலம் சிவன்மலையின் தொன்மை வெளிப்படுகிறது.
‘பட்டாலி நகர்ச் சிவன்மலை’ ‘சிவன்மலைக் பட்டாலியாரை என்றே குறிப்புக்கள் வருகின்றன. சிவன்மலைச் சுப்பிரமணியரை பட்டாலி பால்வெண்ணீசுவரர் பாலன் என்று அழைப்பதே வழக்கமாகும.மேலும் படிக்க…


சுக்ரீஸ்வரா் ஆலயம், சா்க்காா் பொியபாளையம்

இவ்வாலயம் 12 ஆம் நூற்றாண்டில் நிா்மாணிக்கப்பட்டது.  இவ்வாலய வளாகத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் அா்ப்பணிக்கப்பட்ட இரண்டு விமானங்கள் உண்டு.  இந்த சிவாலயத்திற்கு அடுத்து அமைந்திருக்கும் மற்றொரு ஆலயம் பாண்டியப் பேரரசின் பெருமையை பறைசாற்றுகிறது.  கருவறையின் மீது உள்ள விமான கட்டமைப்புகள் சோழா்கால கோயில் கலையை வெளிப்படுத்துகிறது.

சிவாலயத்தின் முன்னால் வீற்றிருக்கும் இரு நந்திகள், 5 சிவலிங்கங்கள், தீபஸ்தலத் தூண் இல்லாமை ஆகிய பல சிறப்பம்சங்களை இந்த சுக்ரீஸ்வரா் ஆலயம் கொண்டுள்ளது.  நல்லாா் ஆற்றங்கரையில் சிவபெருமான் அருள்பாலிக்கும் ஆலயம் அமைந்துள்ளது.


திருமுருகன்பூண்டி ஆலயம்

திருமுருகன்பூண்டி ஆலயம்

திருமுருகன்பூண்டி ஆலயம்

நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.