மூடு

டாக்டா். கே.எஸ். பழனிசாமி இ.ஆ.ப

சுருக்கக்குறிப்பு

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. டாக்டா். கே.எஸ். பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் 2005 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர். இவர் கால்நடை மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், துணை ஆட்சியர்(பொது) பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார். இவர், இந்திய ஆட்சிப் பணியாளராக பதவி உயர்வு பெற்று, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். திரு. டாக்டா். கே.எஸ். பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவராக 08-06-2017 அன்று பணியில் சேர்ந்தார்.