• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

நிலஅளவைப் பதிவேடுகள் துறை

நகர மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல்       

நில அளவைப் பதிவேடுகள் துறையின் கட்டுப்பாட்டில் வட்ட அலுவலகங்கள் மூலமாக நிலத்தை அளந்து அத்து காட்டுதல், உட்பிரிவு செய்து கொடுத்தல் மற்றும் பட்டா மாற்றம் செய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

நத்தம்  ஆவணங்கள் கணினி மயமாக்கல் பணி

இம்மாவட்டத்தில்  நத்தம் நில அளவை ஆவணங்கள்  கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்  மாவட்டத்தில் எல்லா வட்டங்களிலும், நத்தம் “அ” பதிவேடு, மற்றும்  நத்தம் சிட்டா ஆகியவைகளின்  பதிவுகள்   கணினியில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 100% சரிபார்த்தல் பணியும் முடிவுற்று நத்தம் ஆவணங்களை இணையதளம் மூலமாக வெளியிட நடவடிக்கையில் உள்ளது.

புலப்படங்கள் கணினி மயமாக்குதல்  பணி

இம்மாவட்டத்தில்  புலப்படங்கள் கணினிமயமக்குதல் பணி  கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் புலப்படங்கள்  கணினியில் பதிவு செய்து  முடிக்கப்பட்டு உள்ளன.

மேலும் பல்லடம் வட்டம் புலப்படங்கள் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டும், தாரபுரம் மற்றும் உடுமலை வட்டங்களில் உள்ள புலப்படங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயிலும் உள்ளது.

கணினியில் கிராம வரைபடம் தயார் செய்தல் பணி

தற்போது  கணினியில் வரைவு செய்யப்பட்ட புலப்படங்கள் அனைத்தையும் கிராம வரைபடங்களாக  MOSAICING செய்யும்  நடைபெற்று வருகிறது.

இணையவழி பட்டா மாறுதல்

திருப்பூர்  மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களிலும் நில உடமை பதிவு மேம்பாட்டு  திட்ட ஆவணங்களான அ பதிவேடு, சிட்டா ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும்  அரசு பொது இ சேவை மையங்களின் வாயிலாக பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையவழியாகவே பட்டா மாறுதல் உத்தரவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

தொடர்பு முகவரி :

உதவி இயக்குனர் ( நில அளவை பதிவேடுகள் துறை)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.