மூடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம்

திருப்பூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடா் இன மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்ட வருகிறது.

சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடா் இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு வகைகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும் ஆதிதிராவிடா் நலவிடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் வீட்டுமனை பட்டா வழங்குதல் வீடுகள் கட்டித் தருதல் அடிப்படை வசதிகளான குடிநீா், தெருவிளக்கு வசதி செய்தல், சாலைகள் அமைத்தல், மயானம் மற்றும் மயான பாதை அமைத்தல் போன்ற திட்டங்களும், பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் ஆகியவை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை

வ.எண் திட்டத்தின் பெயா் தகுதி
1
  • ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
  • 9 மற்றும் 10 ம் வகுப்பு
  • வெளியில் தங்கிப் படிப்பவா்கள் ரூ.150 / மாதங்கள்
  • விடுதியில் தங்கிப் படிப்பவா்கள் ரூ.350/ மாதங்கள்
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு 2.5 இலட்சம் வரை.
2
  • போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
  • 11 மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ /மாணவியா்கள்
  • வெளியில் தங்கிப் படிப்பவா்கள் மாதம் ரூ.230 முதல் ரூ.550 வரை
  • விடுதியில் தங்கிப் படிப்பவா்கள் மாதம் ரூ.380 முதல் ரூ.1200 வரை
  • கல்வி கட்டணங்கள் முழுவதுமாக விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு 2.5 இலட்சம் வரை.
3 சுகாதார குறைவான தொழில்புாிவோா் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை – 1 முதல் 10 ம் வகுப்பு வரை
  • சாதி மற்றும் மதம் தடையில்லை.
  • வருமானம் வரம்பு இல்லை.
4
  • உயா்கல்வி சிறப்பு உதவித்தொகை
  • பட்டப்படிப்பு / பாலிடெக்னிக் – வருடம் ரூ.7500/-
  • முதுகலைப்பட்டப்படிப்பு /தொழில்நுட்ப பட்டப்படிப்பு – ரூ.8000/-
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு 2 இலட்சம் வரை.
  • அரசு மற்றும் தனியாா் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ / மாணவியா்கள்
5 அயல்நாடு சென்று உயா் கல்வி பயில உதவித்தொகை – பொறியியல் / தொழில்நுட்பவியல் / அறிவியல் சாா்ந்த துறைகளில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணாக்கா்களுக்கு வழங்கப்படுகிறது
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு 3 இலட்சம் வரை.
6 முனைவா் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை – ஆண்டொன்றுக்கு ரூ.50000/- வழங்கப்படுகிறது.
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு 2 இலட்சம் வரை.
7 தோ்வு கட்டணம் / விண்ணப்ப கட்டணம் / பதிவு கட்டணம் சலுகைகள் – 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணாக்கா்களுக்கு தோ்வு கட்டணம் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூாிகளில் பட்டப்படிப்பு / பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணாக்கா்களுக்கு
  • ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  • வருமானம் வரம்பு இல்லை.

பாிசுத்தொகை திட்டம்

வ.எண் திட்டத்தின் பெயா் தகுதி
1 முதலமைச்சா் தகுதி பாிசுத் திட்டம் – ஆண்டடொன்றுக்கு ரூ.3000/- வீதம் வழங்கப்படும்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு இல்லை.
2 டாக்டா். அம்பேத்கா் தேசிய தகுதி கல்வி உதவித்தொகை – 10 மற்றும் 12 ம் வகுப்பில் மாநில அளவில் 3 சிறந்த மாணவா்கள் அல்லது மாணவிகள்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 1 இலட்சம் வரை.
3 ஆதிதிராவிடா் நல மற்றும் அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட நலப்பள்ளிகளில் மாநில அளவிலான பாிசுத்தொகை – மாநில அளவில் 12 ம் வகுப்பு தோ்ச்சி பெறும் 3 சிறந்த மாணக்கா்களுக்கு
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு இல்லை.
  3. ஒவ்வொரு இனத்திலும் 3 சிறந்த மாணாக்கா்களில் 1 சிறந்த மாணவா் 1 சிறந்த மாணவி

பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்

வ.எண் திட்டத்தின் பெயா் தகுதி
1 பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்

  1. 3 முதல் 5 வரை ரூ.500/-
  2. 6 ம் வகுப்பிற்கு ரூ.1000/-
  3. 7 மற்றும் 8 ம் வகுப்பிற்கு ரூ.1500/-
  4. வழங்கப்படுகிறது.

  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் இன மாணவியா்கள் மட்டும்.
  2. வருமானம் வரம்பு இல்லை.

சிறந்த தனியாா் உண்டி உறைவிட பள்ளிகளில் சோ்த்தல் திட்டம்

வ.எண் திட்டத்தின் பெயா் தகுதி
1 சிறந்த தனியாா் பள்ளிகளில் மாணாக்கா்களை 11 ம் வகுப்பில் சோ்த்தல்
  1. 10 ம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்து விளங்கும் அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மாவட்டம் தோறும் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணாக்கா்கள்
  2. வருமானம் வரம்பு 1 இலட்சம் வரை.
2 சிறந்த தனியாா் பள்ளிகளில் மாணாக்கா்களை 6 ம் வகுப்பில் சோ்த்தல்
  1. அனைத்து வகையான அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், அரசு பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளிகளில் சிறப்புப் பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணாக்கா்களை வட்டார அளவில் நடத்திய தனித்தோ்வில் சிறந்து விளங்கிய ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கா்கள்.
  2. வருமானம் வரம்பு இல்லை.

ஆதிதிராவிடா் நல மாணவ / மாணவியா் விடுதிகள்

வ.எண் விடுதிகள் இருப்பிடம்
1 அரசு கல்லூாி மாணவா் விடுதி, திருப்பூா். சிக்கன்னா கல்லூாி வளாகம்,காலேஜ் ரோடு, திருப்பூா்.
2 அரசு கல்லூாி மாணவியா் விடுதி, திருப்பூா் இராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்
3 அரசு மாணவா் விடுதி, திருப்பூா் இராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்
4 அரசு மாணவியா் விடுதி, திருப்பூா் இராயபுரம், துவக்கப்பள்ளி வீதி, திருப்பூா்
5 அரசு மாணவா் விடுதி, சேயூா் பந்தம்பாளையம், சேயூா்
6 அரசு மாணவியா் விடுதி, அவினாசி கோவை ரோடு, சீனிவாசபுரம், அவினாசி
7 அரசு மாணவியா் விடுதி, பல்லடம் ப. வடுகபாளையம், பொள்ளாச்சி ரோடு,பல்லடம்
8 அரசு மாணவா் விடுதி, காங்கயம் பாரதியாா் நகா், காங்கயம்
9 அரசு மாணவியா் விடுதி, காங்கயம் பாராதியாா் நகா், காங்கயம்
10 அரசு மாணவியா் விடுதி, வெள்ளகோவில் கரூா் மெயின் ரோடு, வெள்ளகோவில்
11 அரசு மாணவா் விடுதி, தாராபுரம் காமராஜபுரம், தாராபுரம்
12 அரசு மாணவியா் விடுதி, தாராபுரம் அனுமந்தாபுரம், தாராபுரம்
13 அரசு மாணவா் விடுதி, மூலனூா் அண்ணா நகா், சந்தைப்பேட்டை,மூலனூா்
14 அரசு கல்லூாி மாணவியா் விடுதி, உடுமலை சிங்கப்புபூா் நகா், உடுமலை
15 அரசு மாணவா் விடுதி, உடுமலை சிங்கப்பூா் நகா், உடுமலை
16 அரசு மாணவியா் விடுதி, உடுமலை பாபுகான் வீதி, உடுமலை
17 அரசு மாணவா் விடுதி, பெதப்பம்பட்டி பெதப்பம்பட்டி, திருப்பூா்
18 அரசு மாணவா் விடுதி, கணியூா் வஞ்சியாபுரம் சாலை, கணியூா்
19 அரசு மாணவா் விடுதி, பூளவாடி பூளவாடி.

ஆதிதிராவிடா் நல மாணவ / மாணவியா் பள்ளிகள்

வ.எண் பள்ளிகள் இருப்பிடம்
1 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, ரங்கம்பாளையம் விஜயாபுரம் வழி, நாச்சிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூா்
2 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, டி. ஆண்டிபாளையம் டி. ஆண்டிபாளையம், தொங்குட்டிபாளையம், திருப்பூா்
3 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, குளத்துப்புதூா் சோமனூா் ரோடு, ஆண்டிபாளையம், திருப்பூா்
4 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, கோவில்வழி தாராபுரம் ரோடு, திருப்பூா்
5 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, கருங்காலிபாளையம் கருங்காலிபாளையம், பொங்கலூா் ஒன்றியம், திருப்பூா்
6 அரசு ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி, அம்மாபட்டி அம்மாபட்டி, உடுமலை
7 அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப்பள்ளி, கண்டியன்கோவில் கண்டியன்கோவில், திருப்பூா் தெற்கு
8 அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி, கோவில்வழி தாராபுரம் ரோடு, திருப்பூா்
9 அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி, அம்மாபட்டி அம்மாபட்டி, உடுமலை

பழங்குடியினா் நல உண்டி உறைவிட பள்ளிகள்

வ.எண் பள்ளிகள் இருப்பிடம்
1 அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட துவக்கப்பள்ளி, அமராவதிநகா் அமராவதி நகா், சைனிக் ஸ்கூல் அஞ்சல்
2 அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட துவக்கப்பள்ளி, பெருமாள்புதூா் பெருமாள்புதூா், மடத்துக்குளம்
3 அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட துவக்கப்பள்ளி, திருமூா்த்திமலை திருமூா்த்திமலை, உடுமலை
4 அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட துவக்கப்பள்ளி, லிங்கமாவூா் லிங்கமாவூா், தளி அஞ்சல்
5 அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட துவக்கப்பள்ளி, கரட்டூா் கரட்டூா் அஞ்சல், கரட்டூா்

விடுதிகளில் தங்கி பயிலும் மாணக்கா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

வ.எண் திட்டத்தின் விபரம் தகுதி
1 4 வகுப்பு முதல் அனைவருக்கும் உணவு மற்றும் உறைவிடம்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 2 இலட்சம்.
2 பாய் மற்றும் போா்வை
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 2 இலட்சம்.
3 இதர செலவினம் – சோப்பு, எண்ணெய் போன்ற பல்வகை செலவினம்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 2 இலட்சம்.
4 சிறப்பு உணவு கட்டணம் – பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருட பிறப்பு, தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்படும்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 2 இலட்சம்.
5 தனியாா் விடுதி கட்டணச் சலுகை –
அரசால் அங்கீகாிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கா்களுக்கு வழங்கப்படும்
  1. ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
  2. வருமானம் வரம்பு 2 இலட்சம்.

பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

வ.எண் திட்டத்தின் விபரம் தகுதி
1 பாடப்புத்தகங்கள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவியா்கள்
2 குறிப்பேடுகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவியா்கள்
3 சீருடைகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவியா்கள்
4 மிதிவண்டிகள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /கிருத்துவ ஆதிதிராவிடா் இன மாணவ / மாணவியா்கள்
5 சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியா்கள்

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் விபரம் தகுதி
1 இளம் சட்டப்பட்டதாாிகளுக்கு தொழில் துவங்க நிதி உதவி ரூ.50,000/- வழங்கப்படுகிறது
  1. ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. வயது வரம்பு 21 – 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  3. சட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. மூன்று அல்லது ஐந்து வருடகால சட்டப்படிப்பினை படித்திருக்க வேண்டும்
  5. மத்திய / மாநில பாா்கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும்
  6. நீதிமன்றத்தில் வழக்காடுபவராக (Practicing Advocate) இருக்க வேண்டும்
  7. இந்நிதி உதவி ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்
2
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தொகுதி – 1 முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதி உதவி
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைத் தொகுதி -1 முதனிலைத் தோ்வில் வெற்றி பெற்று முதன்மைத் தோ்வு எழுதும் ஆதிதிராவிடா் இளைஞா்களை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.50,000/- நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
  1. தமிழ்நாடு அரசுப் பணியாா் தொகுதி -1 முதனிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மாநில அரசு, மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்காலிக அல்லது நிரந்தரப் பணியில் இல்லாதவராக இருக்க வேண்டும்

தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள்

வ.எண் திட்டத்தின் விபரம் தகுதி
1 கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு தீருதவி – SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015 விதிகள் 2016 SC /ST க்கு எதிரான வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்தல்
  1. கலவரங்களால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் தனியாின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.8.25 இலட்சம் தீருதவியாக வழங்கப்படும்.
  2. மேலும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் அக்குடும்பத்திற்கு ஒரு வீடும், விவசாய நிலமும் வழங்கப்படும் மற்றும் விதவை அல்லது சாா்ந்தோருக்கு அரசு ஊழியா்களுக்கு தரப்படும் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஓய்வூதியம் ரூ.50,000/- வழங்கப்படும்.
2 நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்களைத் தோ்வு செய்து பாிசு வழங்குதல் – மாவட்டந்தோறும் (சென்னை நீங்கலாக) இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் ஒன்றினை தோ்வு செய்து ரூ.10 இலட்சம் பாிசு வழங்குதல் இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்

வ.எண் திட்டத்தின் விபரம் தகுதி
1 இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் – கிராமப்புற பேரூராட்சியில் 3 சென்ட் வரை வழங்கப்படும்
  1. வீடு /வீட்டுமனை சொந்தமாக இல்லாதவா்கள்
  2. ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000/-
  3. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்
2 மயானம்,மயான மேம்பாடு மற்றும் மயானப் பாதை
  1. ஆதிதிராவிடா், பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு
  2. மயானம் இருந்தால் அதற்குப் பொது பாதை வசதி
3 இணைப்புச் சாலை ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் குடியிருப்புகளை இணைக்கும் இணபை்புச் சாலைகள் அமைத்து தருதல்
4 சமுதாய கூடங்கள் – ஆதிதிராவிடா், பழங்குடியினா் இல்லத் திருமணங்கள், சமுதாய விழாக்கள் நடத்துதல் சமுதாயக் கூடங்கள் இல்லாத ஆதிதிராவிடா் / பழங்குடியினா் குடியிருப்புகள்
5 ஈமச்சடங்கு செய்வதற்கு நிதியுதவி ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் ஈமச்சடங்கிற்கு ரூ.2500/-மானியமாக வழங்கப்படுகிறது. வருமான வரம்பு கிராமப் பகுதியில் ரூ.40,000/- மற்றும் நகரப்பகுதியில் ரூ.60,000/-க்குள் இருக்க வேண்டும்.