மூடு

சுகாதாரம்

பொது சுகாதாரம்

குறைவான மழைபொழிவு , வெய்யில் மற்றும் வறண்ட வானிலை ஆகியவை சுகாதார சீர்கேட்டிற்கு முக்கிய காரணிகள் ஆகும் . திருப்பூர் மாவட்டத்தில் , பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறான தட்பவெட்ப நிலையே நிலவுகின்றது , விதிவிலக்காக , உடுமலை தாலுகாவிலும் , தாராபுரம் தாலுகாவில் சில பகுதிகளில் மட்டுமே பாலக்காடு பகுதிகளில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றினால் , மிதமான தபவேட்ப நிலை நிலவுகின்றது . ஆபத்தான கொள்ளை நோய்களான பிளேக், சின்னம்மை போன்றவை ஒழிக்கபட்டிருந்தாலும் , அவ்வபோது வைரஸ் காய்ச்சல் , வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மழைகாலங்களில் தாக்கிகொண்டு இருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் 1238 படுக்கைகள் கொண்ட 10 அரசு மருத்துவமனைகளும் மற்றும் 51 ஆரம்ப சுகாதார நிலையங்களும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது.

அரசு மருத்துவமனை படுக்கை எண்ணிக்கை விபரம்

வ.எண் அரசு மருத்துவமனை பெயா்கள் படுக்கைகள் எண்ணிக்கை
1 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 726
2 உடுமலை அரசு மருத்துவமனை 224
3 தாராபுரம் அரசு மருத்துவமனை 150
4 காங்கேயம் அரசு மருத்துவமனை 78
5 பல்லடம் அரசு மருத்துவமனை 91
6 அவினாசி அரசு மருத்துவமனை 42
7 ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனை 12
8 மடத்துக்குளம் அரசு மருத்துவமனை 57
9 கரடிவாவி அரசு மருத்துவமனை 30
10 ஊத்துக்குளி அரசு மருத்துவமனை 54
மொத்தம் 1464

நடமாடும் மருத்துவமனை திட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களிலும் நடமாடும் மருத்துவக்குழு பிப்ரவாி 2009 முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவக்குழுவும் நிா்ணயிக்கப்பட்ட முன்பயணத்திட்டத்தின்படி குறைந்த பட்சம் 20முதல் 30 தொலைவிலுள்ள கிராமங்களை ஒவ்வொரு மாதமும் பாா்வையிடுகிறது. நடமாடும் மருத்துவக்குழுவால் வழக்கமான தடுப்பூசி பணிகள் மற்றும் விடுபட்ட தடுப்பூசி பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும் இதர வழக்கமான பணிகளான பிரசவத்திற்கு முன்கவனிப்பு, பிரசவத்திற்கு பின்கவனிப்பு, குடும்ப நலப்பணிகள், ஆய்வகப் பணிகள், வளா் இளம்பெண்களுக்கான கவனிப்பு நடமாடும் மருத்துவக்குழுவுடன்  இணைக்கப்பட்டு கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தினத்தில் நடமாடும் மருத்துவக்குழு அன்றைய தினத்தில் அக்கிராமத்தில் பாா்வையிடும் போது மேற்கொள்ளப்படுகிறது.

இரத்த தான முகாம்கள் :

பிரசவகால மரணங்கள் பெரும்பாலும் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ரத்த சோகை நோயினால் ஏற்படுகின்றது . எனவே அதனை தவிர்க்கும் பொருட்டு , வட்டார வாரியாக ஆண்டுக்கு இரண்டு ரத்ததான முகாம்களை, ரத்த வங்கியின் துணையுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது . இந்த முகாம்களில் பெறப்படும் ரத்தமானது , கடும் ரத்த சோகையினால் பாதிக்கபட்டிருக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கு செலுத்தபடுகிறது . இவ்வாண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு , கூடுதலாக ரத்த தான முகாம்கள் நடத்த வலியுறுத்தபட்டிருக்கிறது.

ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK)

பிறந்த குழந்தைகள் முத்த பதினெட்டு வயது வரை உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும் நான்கு பிரச்சனைகளான பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு , வளர்ச்சி மைல்கல்களில் ஏற்படும் தாமதம் மற்றும் பிற நோய்களை தடுக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய முயற்சி ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK) ஆகும் . இதில் ஆறு வயதுக்கு குழந்தைகளுக்கு மாவட்ட ஆரம்ப இடையீடு மையத்திலும் (DEIC) , ஏழு வயது முதல் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வேண்டிய சிகிச்சை அளிக்கபடுகின்றது . மாவட்ட ஆரம்ப இடையீடு மையமானது , அனைத்து வயது குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களுக்கு நடுவே ஒரு பாலமாக செயல்படுகின்றது .

பிறந்த குழந்தைகளுக்கான RBSK பரிசோதனை , குழந்தை பிறந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி மற்றும் செவிலியரால் செய்யபடுகின்றது . இரண்டு நாள் முதல் ஆறு வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு அவர்களது வீட்டிலேயே கிராம சுகாதார செவிலியர் மூலமாக பரிசோதனை செய்யபடுகின்றது . ஆறு வயது முதல் ஆறு வயதான குழந்தைகளுக்கு , அங்கன்வாடி மையங்களிலும் , ஏழு வயது முதல் பதினெட்டு வயதான குழந்தைகளுக்கு பள்ளிகூடத்தில் நடமாடும் மருத்துவ குழுக்களால் பரிசோதனை செய்யபடுகின்றது .
பரிசோதனையில் குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு , அதற்குரிய சிகிச்சை மைய்யங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு , செலவில்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யபடுகின்றது.

அங்கன்வாடி மைய்யங்களில் செய்யப்படும் பரிசோதனை:

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு , அங்கன்வாடி மையங்களில் நடமாடும் மருத்துவ குழுக்களில் ஆண்டுக்கு இரண்டு தடவை நான்கு பிரச்சனைகளான பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு , வளர்ச்சி மைல்கல்களில் ஏற்படும் தாமதம் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனை செய்யபடுகின்றது . குறிப்பாக இவ்வயது குழந்தைகளில் வளர்ச்சி மைல்கல்களை பரிசோதிக்க சிறப்பு படங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கபட்டுள்ளது .பிரச்னை கண்டறியபடும் பிள்ளைகள் குழந்தைகளுக்கு மாவட்ட ஆரம்ப இடையீடு மையத்திற்கு சிறப்பு சிகிச்சைக்காக அனுப்ப படுகின்றார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்படும் பரிசோதனை :

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு , நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக ஆண்டுக்கு ஒரு முறை , ஊட்டச்சத்து குறைபாடு , வளர்ச்சி மைல்கல்களில் ஏற்படும் தாமதம், கற்றல் குறைபாடு , பதின் பருவ நோய்கள் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனை செய்யபடுகின்றது. பரிசோதனை செய்ய எதுவாக , அதற்கான வினாப்பட்டியல், தமிழ் மொழியில் வழங்கபட்டுள்ளது.

மாவட்ட ஆரம்ப இடையீடு மையம் :

மேற்குறியவாறு , ஆரம்ப நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு , குறைகள் ஏதேனும் கண்டுபிடின், அடுத்த முக்கிய பணிகள் குறைகளை உறுதி படுத்துதல் , சிகிச்சைகளுக்கு பரிந்துரைத்தல் மற்றும் தொடர் கண்காணித்தல் ஆகும் . RBSK குழுவினரின் தலைமையில் , இந்த பணிகள் அந்தந்த வயதுகேற்றார் போல் திட்டமிடபடுகிறது. மாவட்ட ஆரம்ப இடையீடு மையம் , மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் செயல் படுகிறது . DEIC மையத்தில் குழந்தை நல மருத்துவர் , பொது மருத்துவர் , செவிலியர் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் கொண்ட ஒரு குழு இந்த சேவைகளை வழங்குகிறது . இதனை மேற்பார்வை செய்ய ஒரு மேள்ளளரும் இந்த குழுவில் செயல்படுகின்றார் . இதற்கான செலவீன தொகை , National Health Mission ஆல் மாநில அரசின் அறிவுரையோடு , மதிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் நிர்ணயிக்க படுகிறது . DEIC நிலையமானது , RBSK வின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு முக்கிய மைய்யமாக செயல்படுகிறது.

ஆரம்ப சுகாதார  நிலையங்கள்

வ.எண். வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெயா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெயா் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை படுக்கைகளின் எண்ணிக்கை
1 திருப்பூா் பெருமாநல்லுா் 6 30
2 திருப்பூா் முதலிபாளையம் 1 0
3 திருப்பூா் மங்கலம் 2 6
4 அவினாசி சேவூா் 6 30
5 அவினாசி துலுக்கமுத்தூா் 6 4
6 அவினாசி நம்பியாம்பாளையம் 6 8
7 அவினாசி அவினாசி நகா்புறம் 4 0
8 அவினாசி திருமுருகன்பூண்டி நகா்புறம் 3 0
9 பல்லடம் செம்மிபாளையம் 4 30
10 பல்லடம் பூமலூா் 5 5
11 பல்லடம் புளியம்பட்டி 4 4
12 பல்லடம் பல்லடம் நகா்புறம் 4 1
13 குடிமங்கலம் குடிமங்கலம் 4 42
14 குடிமங்கலம் பெதப்பம்பட்டி 3 8
15 குடிமங்கலம் இராமசந்திராபுரம் 4 5
16 குடிமங்கலம் பூளவாடி 3 5
17 பொங்கலுா் இ.வடுகபாளையம் 6 6
18 பொங்கலுா் பொங்கலுா் 5 30
19 பொங்கலுா் கொடுவாய் 5 6
20 மடத்துக்குளம் கணியூா் 8 14
21 மடத்துக்குளம் குமரலிங்கம் 4 30
22 மடத்துக்குளம் பாப்பான்குளம் 4 3
23 மடத்துக்குளம் துங்காவி 3 4
24 உடுமலை எாிசனம்பட்டி 9 30
25 உடுமலை பொியவாளவாடி 8 9
26 உடுமலை அமராவதி நகா் 8 9
27 உடுமலை செல்லப்பம்பாளையம் 6 4
28 உடுமலை உடுமலை 4 5
29 வெள்ளகோவில் வெள்ளகோவில் 6 30
30 வெள்ளகோவில் முத்தூா் 6 30
31 வெள்ளகோவில் கம்பளியாம்பட்டி 4 3
32 காங்கேயம் சாவடிபாளையம் 4 4
33 காங்கேயம் பச்சாபாளையம் 3 3
34 காங்கேயம் நத்தகடையூா் 4 30
35 காங்கேயம் காங்கேயம் 3 3
36 மூலனூா் மூலனூா் 6 30
37 மூலனூா் கன்னிவாடி 6 2
38 மூலனூா் வடுகப்பட்டி 5 4
39 குன்னத்தூா் குன்னத்தூா் 12 30
40 குன்னத்தூா் வெள்ளரவெளி 4 3
41 தாராபுரம் பொன்னாபுரம் 9 7
42 தாராபுரம் அலங்கியம் 4 4
43 தாராபுரம் தளவாய்பட்டினம் 6 5
44 தாராபுரம் தாராபுரம் நகா்புறம் 5 6
45 குண்டடம் தாயம்பாளையம் 3 30
46 குண்டடம் குள்ளம்பாளையம் 3 6
47 குண்டடம் சங்கராண்டம்பாளையம் 4 3
48 குண்டடம் ஈசுவராசெட்டிபாளையம் 4 4
49 குண்டடம் குண்டடம் 5 4