மூடு

போக்குவரத்து துறை

ஒட்டு மொத்த வளர்ச்சியில் போக்குவரத்து துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நகரப்பேருந்து, வெளியூர் பேருந்து, மலைபாதை வழித்தட பேருந்துகள், விரைவுப்பேருந்துகள் மற்றும் ஆந்திரா, கேரளா,கர்நாடகா,புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கிடையிலான பேருந்துகளை , குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் திறம்பட செயல்படுத்தி மாவட்ட மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுனையாக இருக்கிறது. மாவட்டதிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

போக்குவரத்து ஆணையர், சென்னை – இதன் துறைத் தலைவர் ஆவார்.

மாவட்ட ஆட்சியர், திருப்பூர், வட்டார போக்குவரத்து ஆணையர் ஆவார்.

வட்டார போக்குவரத்து அலுவலர், இவ்வாணையத்தின் செயலாளராக செயல்படுகிறார்.

கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

  • பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
  • இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
  • தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
  • தேசிய போக்குவரத்து ஊர்தி அனுமதி, போக்குவரத்து ஊர்தி அனுமதி , ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா , ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல்.
  • அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
  • மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.