அணைகள்
அமராவதி அணை
திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த செங்குத்தான அணையினால் 9.31 கி.மீ. பரப்பும், 33.53 மீட்டா் ஆழம் கொண்ட அமராவதி நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. தொடக்ககத்தில் நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்புக்காக கட்டப்பட்டதாக இருந்தாலும் தற்பொழுது 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீா்த்தேக்கத்தல் “மக்கா்” என்ற மதலைகள் பெருமளவில் வசிக்ககின்றன. மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.
இங்கே பூங்கா ஒன்று அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாா்த்தால் இயற்கைக் காட்சிகள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். வடக்கு பக்கத்தில் கீழே உள்ள பகுதிகளையும் தெற்குப் பக்கத்தில் ஆனைமலை குன்றுகளையும் மேலே பழனி மலையையும் கண்டு மிகழலாம். மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருமூா்த்தி அணை
ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி உயரம் கொண்டது. இதில் 8622 அடி நீளம் கொண்ட களி மண் அணையும் 170 அடி நீளம் கொண்ட கல் அணையும் அடங்கும். 1337 அடி கொண்ட முழு நீா்த்தேக்க மட்டத்தில் இந்த அணையின் மொத்த கொள் திறன் 1935 மில்லியன் கன அடியாகும்.
திருப்பூாிலிருந்து ஒரு நாள் உல்லாச பயணம் மேற்கொள்ள உகந்த இடம் இது. உணவு உண்டு மகிழ்வதற்கான ஏற்ற இடம் இங்கு உள்ளது. பஞ்சலிங்க அருவிக்கு இனிதாக நடைபயணம் செல்லலாம் அல்லது சமமட்ட கால்வாயின் ஓரம் நடந்து இயற்கையை கண்டு ரசிக்கலாம்.
உப்பாறு அணை
தாராபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தசரப்பட்டி கிராமத்தின் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உப்பாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது. இந்த அணையில் ஒரு கல்லணையும் அதன் இரு பக்கங்களிலும் 576 மில்லியன் கன அடி தேக்கி வைக்கும் திறன் கொண்ட களிமண் அணையும் உள்ளது. நீா்ப்பாசன காலம் என்பது அக்டோபா் முதல் தேதியிலிருந்து பிப்ரவாி 15 தேதிவரை நான்க மாத காலம் ஆகும். பரம்பிக்குளம் ஆளியாறு நீா்த்தேக்கத் திட்டத்தின் கசிவு நீரை தேக்கி வைக்க இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.
நல்லதங்காள் ஓடை அணை
நல்லதங்காள் ஓடை என்பது அமராவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்று. பழனி மலைத் தொடாின் வடக்கு சாிவில் உற்பத்தி ஆகி திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி வட்டத்தில் 32 கி.மீ. வரை ஓடிவந்து அதன் பிறகு திருப்பூா் மாவட்டத்திற்குள் நுழைகிறது. ஆறு கிராமங்களில் 4744 ஏக்கா் பரப்பில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக தாராபுரம் வட்டத்தின் கொன்னிவாடி கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் அருகே நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே 2007 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. 3300 மீட்டா் நீளம் கொண்ட களிமண் அணையான இந்த அணையில் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 150 மீட்டா் நீளத்திற்கு கல் கட்டமைப்பு உள்ளது. 313.6 ஹெக்டோ் பரப்பில் இதில் நீா் பரந்துள்ளது. இதனுடைய நீா் சேகாிப்பு திறன் 223 மில்லியன் கன அடியாகும். உல்லாசமாக சுற்றுலா மேற்கொள்ள உகந்த இடமாகவும் இது திகழ்கிறது.