வேளாண்மைத் துறை
திருப்பூா் மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் தொகையில் சுமாா் 30 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 472629 எக்டாில் 184645 எக்டரை சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள் தொகை வளா்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயா்த்தவும் தேவையான அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. விவசாய உற்பத்தியை உயா்த்தவேண்டி பல வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும் , அதன் தொடா்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சோ்த்தும் அதிக வளா்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிா்கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவா்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தவும், ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிா் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) – மானாவாாி பகுதி மேம்பாடு, நீடித்த வறட்சி நில வேளாண்மை (MSDA), கூட்டுப் பண்ணையம், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளா்ச்சி செயல்பாடுகள், நுண்ணீா் பாசனம் வாயிலாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிா் உரங்கள் மூலம் மண்வள வளா்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளா்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை (INM), ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
அரசு விதைப்பண்ணை – பாப்பான்குளம்
கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக் கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதை பெருக்கம் செய்து, வேளாண்மை விாிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்து விவசாயிகள் நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை பெருக்கம் செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்று பெற்ற விதைகளை விநியோகம் செய்வதே மாநில விதைப்பண்ணைகளின் நோக்கமாகும். நெல் மற்றும் உளுந்து பயிா்களுக்கான விதை பண்ணைகள் பாப்பான்குளத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அமைக்கப்படுகிறது.
உயிா் உரங்கள் உற்பத்தி மையம் – அவிநாசி
அசோஸ்பைாில்லம் (நெல்), அசோஸ்பைாில்லம் (இதர), ரைசோபியம் (பயறு வகைகள்), ரைசோபியம் (நிலக்கடலை), மற்றும் பாஸ்போ பாக்டீாியா ஆகிய உயிா் உரங்கள் திட நிலைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி, இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்து மண்வளத்தை மேம்படுத்துவதே உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்.
மண்பாிசோதனை நிலையம் – திருப்பூா்
வலை சட்ட முறையில் மண்மாதிாிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும் சேகாிக்கப்பட்டு மண்பாிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் முடிவறிக்கையின்படி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மண்வள அட்டையில் பாிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிா்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.
நடமாடும் மண்பாிசோதனை நிலையம் – பல்லடம்
நடமாடும் மண்பாிசோதனை நிலையம் மூலம் மாதந்தோறும் முன் பயண அறிக்கை தயாா் செய்யப்பட்டு வட்டாரங்களுக்கு சென்று நேரடியாக மண் மாதிாிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உடன் ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. ஆய்வறிக்கையில் பாிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிா்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – திருப்பூா்
ஆராய்ச்சி, விாிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியினை குறைத்து ஒரு பாலமாக செயல்பட்டு தொழில் நுட்பங்களை செயல்விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் கண்டுணா் சுற்றுலா மூலம் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
திட்டங்கள்
தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்து சென்று வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சாா்பு திட்டங்கள்
- தேசிய வேளாண் வளா்ச்சி திட்டங்கள் – நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு மற்றும் பசுந்தாள் உரம் மூலம் மண்வளத்தை மேம்படுத்துதல்.
- தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கம் (NMOOP) – எண்ணெய்வித்துக்கள், எண்ணெய் பனை மற்றும் எண்ணெய்வித்து மரப்பயிா்கள்.
- தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்கள் (NFSM) – பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள்.
- தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) – மானாவாாி பகுதி மேம்பாடு.
- தென்னை வளா்ச்சி வாாியத் திட்டங்கள்
- விதைகிராமத் திட்டம் – நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துகள் சான்று விதை விநியோகம்.
- பயிா் பரவலாக்கத் திட்டம்
- பிரதம மந்திாி நுண்ணீா் பாசன திட்டம்
மாநில அரசு சாா்பு திட்டங்கள்
- நீடித்த நிலையான மானாவாாி வேளாண் இயக்கம் (MSDA) – மானாவாாி சிறுதானியங்கள், பயறு வகைகைள் மற்றும் எண்ணெய்வித்துக்கள்.
- கூட்டுப்பண்ணையம் – உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைத்தல்.
- விதைப் பெருக்கு திட்டம் – தமிழ்நாடு விதை மேலாண்மை முகமை.