பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை

கல்வி உதவித்தொகை திட்டங்கள் (ஆறாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை)

  1. பள்ளிப் படிப்பு உதவித் தொகை
  2. பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை
  3. மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித் தொகை திட்டம்.
  4. பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்.
  5. தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்.

வருமானம் மற்றும் இதர தகுதிகள்

  1. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றை சாளர முறையில் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  2. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  3. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது (6-8 வகுப்பு = ரூ. 200, 9-10 வகுப்பு = ரூ. 250, 11-12 வகுப்பு = ரூ. 500).
  4. பி்.ந/மி.பி.ந. மாணவா்கள் முந்தைய இறுதி தோ்வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சீா்மரபினா் இன மாணவா்களுக்கு குறைந்த பட்ச நிபந்தனை இல்லை.
  5. கல்வி உதவித்தொகை மாணவா்களின் வங்கி கணக்கிற்கு ECS மூலம் வழங்கப்படும்.

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல்

  1. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்து வகுப்பு வரையிலான மாணவியா்களுக்கு ரூ. 500/-ம்,
  2. ஆறாம் வகுப்பு மாணவியா்களுக்கு ரூ. 1,000/-ம் வழங்கப்படுகிறது.
  3. பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 25,000/-க்குள் இருக்க வேண்டும்.
  4. கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவியா் பயில வேண்டும்.
  5. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் இனத்தை சார்ந்த கிராமப்புற பெண் குழந்தைகள் மட்டும் பயன்பெறுவா்.

விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்

  1. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்த சலவை தொழிலை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
  2. சலவைத் தொழில் செய்வோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

  1. பிந/மிபிந/சீம வகுப்பைச் சார்ந்த மகளிருக்கு மட்டும்.
  2. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  3. தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. வயது 20 முதல் 45க்குள் இருத்தல் வேண்டும்.

விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல்

  1. நிலமற்ற வீடற்ற ஏழை பிந/மிபிந/சீம இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  2. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விடுதியில் மாணவ-மாணவியா் சோ்க்கை விபரம்

வ.எண் விடுதியின் பெயா் வகைப்பாடு கட்டடத்தின் தன்மை ஒப்பளிக்கப்பட்ட மாணவ-மாணவியாின் எண்ணிக்கை ஒதுக்கீடு அடிப்படையில் விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவ-மாணவியா் எண்ணிக்கை
1. கல்லூாி மாணவா் விடுதி திருப்பூர் பிவ அரசு 120 120
2. கல்லூாி மாணவா் விடுதி உடுமலைப்பேட்டை பிவ அரசு 50 50
3. கல்லூாி மாணவியா் விடுதி உடுமலைப்பேட்டை பிவ அரசு 100 68
4. பள்ளி மாணவா் விடுதி பொங்கலூா் பிவ அரசு 50 40
5. பள்ளி மாணவா் விடுதி பல்லடம் பிவ அரசு 50 23
6. பள்ளி மாணவா் விடுதி உடுமலைப்பேட்டை பிவ அரசு 50 50
7. பள்ளி மாணவா் விடுதி , குமரலிங்கம் பிவ அரசு 50 44
8. பள்ளி மாணவா் விடுதி காங்கேயம் பிவ அரசு 50 50
9. பள்ளி மாணவா் விடுதி வெள்ளகோவில் பிவ அரசு 50 44
10. பள்ளி மாணவா் விடுதி தாயம்பாளையம் பிவ அரசு 50 37
11. பள்ளி மாணவா் விடுதி தாராபுரம் பிவ அரசு 50 27
12. பள்ளி மாணவா் விடுதி குண்டடம் பிவ அரசு 50 46
13. பள்ளி மாணவா் விடுதி எலுகாம்வலசு பிவ அரசு 50 41
14. பள்ளி மாணவா் விடுதி சின்னக்காம்பட்டி பிவ அரசு 50 32
15. பள்ளி மாணவா் விடுதி ஊத்துக்குளி பிவ அரசு 60 37
16. பள்ளி மாணவியா் விடுதி திருப்பூர் பிவ அரசு 50 50
17. பள்ளி மாணவியா் விடுதி உடுமலைப்பேட்டை பிவ அரசு 50 33
18. பள்ளி மாணவியா் விடுதி காங்கேயம் பிவ அரசு 55 45
19. பள்ளி மாணவா் விடுதி வெள்ளகோவில் பிவ அரசு 50 50
20. பள்ளி மாணவியா் விடுதி தாராபுரம் பிவ அரசு 50 25
21 பள்ளி மாணவியா் விடுதி முத்தூா் மிபிவ அரசு 50 37
22. பள்ளி மாணவியா் விடுதி சின்னக்காம்பட்டி மிபிவ அரசு 50 23
23. பள்ளி மாணவா் விடுதி மடத்துக்குளம் மிபிவ அரசு 50 31
24. பள்ளி மாணவா் விடுதி திருப்பூர் சீ.ம தனியாா் 50 20
25. பள்ளி மாணவா் விடுதி அவினாசி சீ.ம அரசு 50 24